மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருக்கிறது, பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவாலான வேலைகள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் நல்ல அனுபவமாக அமையும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ரகசியங்களை வெளியில் சொல்வதில் எச்சரிக்கை தேவை. மூன்றாம் நபர்களிடமிருந்து கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கற்பனைகளை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது குடும்பத்தில் உணர்ச்சி பெருக்கெடுக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே காதல் அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்ய திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியம் காலதாமதம் ஆகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள முயற்சி செய்வது உத்தமம். அலட்சியம் ஆபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வு எடுப்பீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பகைவர்களும் நண்பர்களாக கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய பேச்சில் இனிமை காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலைச்சலை சந்திக்கலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயல் சிறப்பாக அமையக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வராத பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர விரயம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இழுபறி ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் எவரையும் தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் பணப்புழக்கம் காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கருத்துக்களை தைரியமாக முன் வைப்பது நல்லது. எவரையும் எதிர்த்து குரல் கொடுக்கும் துணிச்சல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யும் செயலை திட்டமிட்டு செய்யுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உணர்ச்சி மிகுந்த நல்ல நாளாக இருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவைவிட செலவுகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். மனதிற்கு பிடித்தவர்களிடம் இருந்து நற்செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபத்தை இரட்டிப்பாக காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.