மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மேன்மை உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை அமைதி காப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்துக் காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேற்றுமைகள் தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுப பலன்கள் உண்டாகக் கூடிய நாளாக இருக்கும். நஷ்டம் ஏற்படாமல் இருக்க முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அதிகம் யோசிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த இடியாப்ப சிக்கல் தீரும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி அடைய கூடியதாக இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை சிந்தனை பெருகும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் அனுகூல பலன்களை கொடுக்கும். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் ஏதாவது ஒரு குழப்ப நிலை இருக்கும். முக்கிய முடிவுகளை எடுத்து வைப்பதை தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்டநாள் விட இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களிடம் பேசும் பொழுது இனிமையாக பேசுவது நல்லது. கடுஞ்சொற்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படாமலிருக்க விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கவிருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான மற்றும் துணிச்சலான எண்ணங்கள் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். முகத்தில் ஒருவிதமான புத்துணர்வு தெரியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயத்திற்கு தீர்வு கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு வேலைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற பிரச்சனைகளை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும்