மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இறை பக்தி அதிகரித்து காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும் என்பதால் கவலைகள் மறக்கும். எண்ணியது ஈடேறும், பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் இன்பம் நிறையும் நல்ல நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சில மன சங்கடங்கள் இருப்பவர்களால் ஏற்படக்கூடும் ஜாக்கிரதை! கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களை சமாளிக்க கூடிய வைராக்கியம் பிறக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பனிப்போர் மெல்ல மறையும். தொழில் மற்றும் வியாபாரிகள் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களை சாதக பலன் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்கள் அனுபவமாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் விரிசல் மேலும் வலுவாகாமல் இருக்க வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் நினைத்ததை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய இடங்களுக்கு பயணிக்க கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தபடி அமையப் போகிறது. தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் எழ வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுவாசம் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு கவனமுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேர போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை வலுவாகும் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து மகிழ்வீர்கள். சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மன கசப்புகள் உண்டாகும் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் எனவே தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எவரையும் மட்டம் தட்டி பேசாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களை உணர வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களை எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வார்த்தைகளை விட்டு விட வேண்டாம்