மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எது நடக்கவில்லை என்று நினைத்தீர்களோ அது நடக்கப் போகிறது. சுய தொழிலில் ஏற்படக்கூடிய லாபம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். வெளியிடங்களில் வார்த்தையை கொட்டாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதம் நடக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் போகிறது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும் வாய்ப்புகள் அமையும். திடீர் பணவரவு உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய தொழிலில் நீங்கள் கூடுதல் முயற்சியுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் கூடும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு விமர்சனங்கள் எழுதுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்கள் சுய லாபத்தை மற்றவர்களுக்காக வீண் விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விரிசல் விழக் கூடும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொலைதூரப் போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். சுய தொழிலில் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சியில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தடைபட்ட சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் கிட்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் அனுகூல பலன்கள் கொடுக்க இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க புதிய உத்திகளை கையாளும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நேர்வழியாக சிந்திப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீண்ட நாள் இழுப்பறியில் இருந்த வேலை முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய வேலை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிருங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். வரக்கூடிய லாபத்தை சரியான வழியில் செலவிடுவது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் நிறையும்படியான அமைப்பு உண்டு. கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் கூடும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறுவீர்கள். சொந்த முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக்குறை நீங்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள். பேசிய வார்த்தைகளை அல்ல முடியாது. கணவன் மனைவியிடையே சிறு சிறு சங்கடங்கள் வந்து நீங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுலபமான வேலையை சிரமப்பட்டு செய்ய வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் பொறுமையை கையாளுவது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் தாம்தூம் என்று ஆடம்பரமாக இல்லாமல் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.