இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினத்துக்கான (17.01.2024) வானிலை எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
தீவின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.