கொழும்பின் பல பகுதிகளில் இன்று (02) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை பிற்பகல் 1.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதால் தேவையான நீரை முன்கூட்டியே சேகரிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
அம்பத்தல பிரதேசத்தில் ஆற்றலை மேம்படுத்தும் செயற்திட்டத்துடன் தொடர்புடைய புதிய குழாய்கள் இணைக்கப்படுவதனால் இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.