இன்று முதல் குறைந்த விலையில் சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாய்க்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபாய் 50 சதத்திற்கும் சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாய் அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
அதோடு எந்தவொரு அரிசி வகையையும் சதொசயில் தலா 5 கிலோகிராம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாய்க்கும் பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாய்க்கும் நூடில்ஸ் ஒரு பொதி 125 ரூபாய்க்கும் சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை, சந்தையில் நிலவும் விலையை விடவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.