எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆகக்குறைந்த கட்டணமாக காணப்படுகின்ற 27 ரூபாயிலும் மாற்றம்ஏற்படும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பில் இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது