ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் சூரியன் இம்மாதம் இன்று வெள்ளிக்கிழமையில் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு அதிகாலை 1:29 மணிக்கு இடம் பெயர இருக்கிறார். சூரியன் இடம்பெயரும் அந்த நாளில்தான் தமிழ் மாதமும் துவங்குகிறது. ஆவணி முடிந்து புரட்டாசி மாதம் துவங்கும் அற்புத நாளாகவும் இருக்கிறது. சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாரெல்லாம்? என்பதை 12 ராசிகளுக்கும் தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இம்மாதம் சூரிய பெயர்ச்சியால் நிறைய நன்மைகளை அடையப் போகிறீர்கள். உங்கள் ராசிக்கு சூரியன் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக இருப்பதால் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக் கசப்புகளை நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையை தீர்க்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய போகிறது. தந்தையுடனான உறவு சிறப்பாக அமையும். சிவ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம். ஆன்மீக ரீதியான விஷயங்களில் அதிகம் ஈடுபடுவீர்கள். இறை சிந்தனை மேலோங்கி காணப்படும். தந்தையுடனான பிரச்சனைகள் மேலும் வலுவாக ஆகாமலிருக்க கூடுமானவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வருகின்ற வாய்ப்புகளை தவற விட்டால் சில முக்கிய விஷயங்களை இழக்க நேரிடும் என்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வருமான ரீதியான முன்னேற்றம் இருக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் சிந்திப்பது நல்லது. துளசி பூஜை செய்து நன்மைகளைப் பெறுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சி திடீர் ஆதாயத்தைக் கொடுக்கும் அற்புத அமைப்பாக இருக்கிறது. விருச்சிக ராசிக்கு 10-வது வீட்டில் அதிபதியாக இருக்கும் சூரியன் சில இழப்புகளை கொடுத்தாலும், அபார வெற்றியையும் கொடுப்பார். வருமானம் ஈட்டக் கூடிய வகையில் லாபம் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு வழி ஆதாயம், அரசு வேலை தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது நல்லது. சமூகத்துடன் உங்களுடைய தொடர்பு மேலும் அதிகரிக்கும். உப்பைக் குறைத்துக் கொள்வது நன்மைகளைக் கொடுக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அற்புத பலன்களை கொடுக்க இருக்கிறது. திருமணம், புதிய உறவுகள் தொடர்பான விஷயங்களில் தடை தாமதங்களை சந்திப்பீர்கள். எதிலும் சில போராட்டங்களுக்கு பிறகு வெற்றியைக் காணும் யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகளை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்துணர்வு கொண்டு செயல்படுவது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தனி திறமையை வெளி உலகிற்குக் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும். உடம்பில் புதிய ஆற்றலும், சக்தியும் பெருகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் கடன் தொல்லைகள், நோய்கள் விலகும். இதுவரை எதிர்த்து நின்றவர்கள் கூட இனி அடங்கிப் போவார்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். கொடுத்த கடனும் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். மனரீதியான குழப்பங்களை தவிர்த்துவிட்டு மனதை திடத்துடன் வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்ட கூடிய நேரமாக அமையும். பணியாட்களை வேலைக்கு புதிதாக அமர்த்தும் வாய்ப்புகள் அமையும். எதிலும் நெகிழ்வு தன்மையுடன் நேரத்திற்கு ஏற்றாற்போல் செயல்படுவது உத்தமம். ஞாயிற்றுக்கிழமையில் சூரியனை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஒரு சிலருக்கு மனக்கசப்புகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் போட்டியாளர்களை விட சிறப்பான முன்னேற்றத்தை பெற வாய்ப்புகள் அமையும். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் நேர்மைக்கு உரிய பரிசுகள் கிடைக்கும். படைப்பாற்றல் மிக்கவர்கள் முன்னிலைப்படுத்த படுவார்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். தந்தைவழி உறவு சிக்கல் தீரும். வயிற்று பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பசுக்களுக்கு பச்சரிசி வெல்லம் கொடுக்க நன்மைகள் நடக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் கிடைக்கக் கூடிய நன்மைகள் நிறைய உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வசதி, சேவைகள் வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற மனக் குழப்பங்களை தவிர்த்து நன்மைகள் நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பொறுமைக்கு உரிய பலனை அனுபவிப்பீர்கள். பெற்றோர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் யோகம் உண்டு. குரு மந்திரத்தை உச்சரிக்க நன்மைகளைப் பெறுவீர்கள்
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரிய பெயர்ச்சியால் பொருளாதார ரீதியான ஏற்றத்தை காண இருக்கிறீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் விஷயங்களில் பணவிரயம் ஏற்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஆசைப்படுவீர்கள். உங்கள் முடிவுகளுக்கு மற்றவர்கள் கட்டாயப்படுத்துவது தவிர்த்து சுயமாக முடிவு எடுப்பது நல்லது. கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள் நன்மைகள் நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் புத்திசாலிதனமாக செயல்படக்கூடிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க இருக்கிறது. நண்பர்களுக்காக சில நேரங்களில் வீண் விரயங்கள் மேற்கொள்வீர்கள். வருமானம் ஈட்டக்கூடிய விஷயங்களில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உடலில் வலி இருந்தாலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம். சூரிய காயத்ரி மந்திரம் உச்சரிக்க நன்மைகள் நடக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் நிறையவே நன்மைகளை பெற போகிறீர்கள். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சூரிய பெயர்ச்சியால் மற்றவர்களுடைய நம்பிக்கையை இழப்பீர்கள் எனவே நீங்களும் அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்காமல் விடா முயற்சி செய்வது நல்லது. நாட்பட்ட நோய்கள் உங்களுக்கு தொந்தரவாக இருக்கலாம் எனவே கூடுமானவரை ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். துர்காதேவியை வழிபட நன்மைகள் நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் வந்து சேரப் போகிறது. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய காலகட்டமாக இருக்கும். அரசாங்க துறையின் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். புதிய உறவுகள் உருவாக வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வகையில் அமையும். பேராசை, சுயநலம், பிடிவாதம் அனைத்தையும் தகர்த்து எறிந்தால் நிச்சயம் மன நிம்மதி இருக்கும். செம்பு மோதிரம் அணிய நன்மைகள் நடக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பெயர்ச்சியால் இனிய நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்பாக இருக்கும். எதிர்பாராத வகையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும். புதிய புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் தகுதிக்கு உரிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சமூகத்தில் உங்களுடைய புகழ் ஓங்கும். சூரியன் தந்தைக்கு காரகத்துவம் கொண்டுள்ளதால் தந்தை வழி ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். எதிர்மறை விஷயங்களை சமாளிப்பீர்கள். உப்பு மற்றும் அரிசி உணவுகளை தவிர்க்க நன்மைகள் நடக்கும்.