இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும் நான்கு கைதிகளும் 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர்.
அத்துடன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.