வெளிநாட்டுப் பயணத்துக்கான பி. சி. ஆர். பரி சோதனைக்கான கட்டணமாக இன்று வெள்ளிக் கிழமை முதல் சகலரிடமும் 6 ஆயிரத்து 500 ரூபா அறவிடப்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
மத்திய சுகாதார அமைச்சின் அறிவு றுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பி. சி. ஆர். பரிசோ தனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6,500 அறவிடப்படும் என கூறப்படுகின்றது.
அதன்படி இன்று முதல் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டை பதிவின்போது சமர்ப்பித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.