சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிக்க சீமெந்து வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, சங்தா 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 350 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சங்தா சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, டோக்கியோ 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 1975 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.