நேற்று வரையான காலப்பகுதியில் 181,872 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவுன்சில் குறிப்பிட்டது.
இதன்படி இந்தியாவில் இருந்து 28,218 பேரும், ரஷ்யாவில் இருந்து 25,112 பேரும், ஜெர்மனியில் இருந்து 16,745 பேரும் வருகை தந்துள்ளனர். கடந்த மாதத்தில் 218,350 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.