நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.2 லட்சம் ரூபா மாத வாடகை என பரவும் காணொளி இணைய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த காணொளியில் ஒரு கழிவறை இருக்கை வசதியற்ற முறையில் கை கழுவுதற்கு இல்லாமல் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
மிக சிறிய அடுக்குமாடி குடியிருப்பு என இன்ஸ்டாகிராமில் ரியல் எஸ்டேட் வியாபாரியான டேவிட் ஒகோச்சா என்பவரால் பகிரப்பட்ட இந்த கானொளி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பார்வையிட்டுள்ளார். இதேவேளை பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் 2 லட்சம் ரூபா வாடகையா என விமர்சித்து வருகின்றனர்.
ஒரு பயனர், நீங்கள் இதுவரை பார்த்திராத மிக மோசமான இடவடிவமைப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு பயனர், ஒரு நில உரிமையாளராக இது சட்டவிரோதமானது. இந்த நில உரிமையாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பதிவிட்டார்.
இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.