இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுவதை இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜொகோ விடோடோ நிராகரித்துள்ளார்.
இந்தோனேசியா இலங்கை நிலைக்கு தள்ளப்படும் என வெளியாகும் கருத்துக்களிற்கு எதிராக முதல் தடவையாக இந்தோனேசிய ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
இவ்வாறான கருத்தை அவர் முற்றாக நிராகரித்துள்ளார். பல உலகநாடுகள் எரிசக்தி நெருக்கடி உணவு நெருக்கடி நிதி நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தோனேசியாவின் தேசிய பொருளாதார சுட்டிகள் நம்பிக்கையளிக்க கூடிய தரவுகளை வெளியிட்டுள்ளன என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எங்களின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.4 வீதமாக காணப்படுகின்றது பணவீக்கம் 4.9 வீதமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமை இன்னமும் கையை மீறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் முகாமைத்துவம் சிறப்பாக காணப்பட்டால் கடன்கள் குறித்து பிரச்சினையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன்களை பயனுள்ள விடயங்களிற்கு பயன்படுத்தவேண்டும்,அதனால் வரவு செலவுதிட்டத்திற்கு சாதகமான பலாபலன் கிடைக்கும் நுகர்விற்காக கடன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் ஜனாதிபதி ஜொகோ விடோடோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது