திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கோரியுள்ளார்.
ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜேவர்தன, இலங்கை கடற்படை எந்த நேரத்திலும் அந்த வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் முன்மொழிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்த நிபந்தனையை விதித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சருக்கு எந்த கருத்தும் இல்லை.
இந்தநிலையில் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள காணி இன்னும் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று ருவன் விஜேயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்