இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்கின்றது.
இவ்வாறு வெளியாகும் அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் நிலைப்பாட்டிற்கு ஏற்பவையாக இல்லை.”
“ இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழுமையாக உறுதுணையாக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்றையதினம் தெளிவாகத் தெரிவித்துள்ளார் .” என அந்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.