இந்தியாவில் கோவிட் தொற்று குறைவடைந்து வரும் நிலையில் விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் பரவல் காரணமாக ஏர் பபுள் முறையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே தற்போது விமான சேவையை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.