இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வழிகாட்டுதல் வைரஸ் உள்ள எவரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்போது உடலுறவில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
முன்னெச்சரிக்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எட்டு வாரங்களுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
மக்கள்தொகைக்கான ஆபத்து குறைவாக உள்ளது. ஆனால் புதிய தடிப்புகள் அல்லது புண்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம கூறுகிறது.
மொத்தத்தில், இங்கிலாந்தில் 172 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்தில் நான்கு, வடக்கு அயர்லாந்தில் இரண்டு மற்றும் வேல்ஸில் ஒன்று