ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் திடீரென உயி ரிழந்த நிலையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அசன்பாவா வீதி, பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான படகு சாரதி (ஸ்கீப்பர்) எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் திடீரென இரவு ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் சென்றவர்கள், உயிரிழந்தவருடன் இன்று கரை திரும்பியுள்ளனர். இந்நிலையில் சடலம், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் உயிரிழந்த மீனவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.