வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன