இரத்தினத்தினபுரி, கலவான குகுலே ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இந்த சிறுமி கலவான துனுமகல வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இந்த நாட்களில் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி ஆற்றில் குதித்ததை இளைஞன் அவதானித்த நிலையில் அவரும் ஆற்றில் குறித்து சிறுமியை காப்பாற்றியுள்ளார்.
இந்த சிறுமி கலவான துனுமகலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் வீட்டில் ஏற்பட்ட கோபம் காரணமாக குகுலே ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றியுள்ளார். விசாரணைகளுக்காக சிறுமி கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.