தளபதி விஜய்யின் லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இப்படத்தை லலித் தயாரித்திருந்தார்.
மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் உலகளவில் கடந்த ஆறு நாட்களில் லியோ படம் ரூ. 435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் நல்ல வசூல் கிடைத்த நிலையில் ஆறாவது நாளில் சற்று பின்தங்கி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்று.

