முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தவாறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இனம் காணப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான் குளக் கிராமத்தின் வெற்று காணியில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலம் ஒன்று 24.6.21 காலை இனம் காணப்பட்டுள்ளது.
அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து நேற்று இரவு கணவனை வீட்டில் காணவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுள்ளதுடன் உடலத்தினை மீட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டுசென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.