கொழும்பு, நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் – ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை உட்பட சில பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.