ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைகழக மாணவர்களை தாக்கிய –ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் துமிந்த பெரேரா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துமிந்த பெரேரா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள் சார்பில் இலவசமாக ஆஜராகினர்.
நேற்று கிரிபத்கொடவில் களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை அப்பகுதிக்கு சென்ற துமிந்த பெரேரா மாணவர்கள் உருவாக்கிய பதாகையொன்றை சேதப்படுத்தினார் பின்னர் அவர் மாணவர்களை தாக்கினார்.