சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்படி குறித்த இடத்தில் அரச குடும்ப நல சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதுடன், பெருமளவான மக்கள் அவ்விடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறப்பு பதவி உயர்வுகள் சட்டவிரோதமாக இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.