18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.