இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கைப்பற்றி கடற்படையினர், அதிலிருந்த 200 கிலோகிராம் ஹெரோயினும், அதனை கொணர்ந்த ஈரானிய பிரஜைகளென கருந்தப்படும் 9 பேரையும் கைது செய்துள்ளனர்.
கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ஜனவரி 26 ஆம் திகதி இலங்கையிலிருந்து 2,002 கிலோமீற்றர் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஹெராயினை உள்ளுர் படகுக்கு மாற்றுவதற்கு தயாரான போது, வெளிநாட்டு படகு கைப்பற்றப்பட்டது. கடற்படையினர் வெளிநாட்டு படகை இடைமறித்த போது ஹெரோயின் போதைப்பொருள் கடலில் வீசப்பட்டதுடன் சந்தேகநபர்களிடம் இருந்து 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒன்பது சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் போதைப்பொருள் மற்றும் செய்மதி தொலைபேசிகள் தொடர்பில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.