பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ள நிலையில் இவ்வாரானவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவம் மடவளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் அது குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
நாட்டில், பொருளாதார நெருக்கடியால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைகூட பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்களை ஏமாற்றி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.