21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
இதன்படி, மகளிருக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
முன்னதாக, இலங்கையின் மகளிர் அணித்தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்போது அவர் 13.01 மீட்டர் தூரத்தை பதிவு செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் டுபாயில் நடைபெற்று வருகின்றது.