இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடன் உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வங்கியின் தற்போதைய திட்டங்களில் கடன் உதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
நாடு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்த அறிவிப்பு இலங்கை வாழ் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.