அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலிவ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, யுவதியொருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.