கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 454 அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விமானம் ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

