கேகாலை பொது வைத்தியசாலையின் சமையல்காரர் ஒருவர் 4,002 ரூபா பெறுமதியுடைய சமையல் பொருட்களைத் திருடும்போது வைத்தியசாலையின் அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிபட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நேற்று வியாழக்கிழமை (25) மாலை பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார் .
வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலையைச் சுற்றி பார்வையிட்டபோது சமையற்காரர் கையில் ஒரு பையுடன் பிணவறையை நோக்கி ஓடுவதை அவதானித்துள்ளனர்.
இவரை பின் தொடர்ந்த வைத்திய அதிகாரிகள் இவரைப் பிடித்துச் சோதனையிட்ட போது இவரிடமிருந்து பழங்கள், மீன்கள் மற்றும் உருளைக்கிழங்குகள் போன்ற சமையல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .