நீண்டகாலமாக நட்டத்தினை எதிர்கொண்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தனியார் மயப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹந்தபாங்கொட மஹா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நிறுவனங்களின் உரிமங்கள் அரசாங்கத்தினால் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.