அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.
சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவருக்கு இரண்டு தடை உத்தரவுகளை வௌியிட்டுள்ளது.