அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கும் முறையொன்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், உரிய விடுப்பு பெறும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கவோ வாய்ப்பு கிடைக்கும்.
அதேசமயம் இவ்வாறு விடுமுறையை பெறும் அரசாங்க ஊழியர்களின் சேவை மூப்பு அல்லது ஓய்வூதியத்துக்கு எந்தத் தடையும் இருக்காது என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவிக்கிறது.