அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எதனையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் வகையில் குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பிரசாரங்களை கண்டிக்கும் அதேவேளை, அரச உத்தியோகத்தர்களின் வேலைகள் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.