அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்கள் பெருந்திரளாக கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேவேளை தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் நுழைவு வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை வளாகத்துக்குள் நுழைய விடாமல் ஆயுதமேந்திய இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.