உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டார்.