நாட்டில் நிலவும் தேங்காய் பிரச்சனையை தீர்க்க பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தலையிட்டுள்ளார்.
அதன்படி பேராயருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் உள்ள தேங்காய்களை மானிய விலையில் அரசுக்கு வழங்குவதன் மூலம் , தேங்காய் ஒன்றை 130 ரூபாவிற்கு அரசாங்கத்திற்கு மல்கம் ரஞ்சித் கர்தினால் வழங்க உள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்