இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6,675 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17, 589.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் 24, 264.4 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
வெளிநாட்டுக் கடன்
அரசாங்கத்தின் மொத்த கடன்களில் உள்நாட்டுக் கடன் தொகையானது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 11097.2 பில்லியன் ரூபாவிலிருந்து 12738.5 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை வெளிநாட்டுக் கடன் தொகையானது இந்தக் காலப் பகுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவிலிருந்து 24,264.4 பில்லியன் ரூபா என மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.