அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53% கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்காக 191 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் புனரமைப்பு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்