கனடாவில் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த நபர்களை தடுக்க முற்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.
யோக் பிராந்தியத்தின் நோபிலிடன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகிவிட்டது.
அயலவர்களின் வீட்டில் கொள்ளையிட வந்த நபர்களை தடுக்க முற்பட்டபோது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான பூரண விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பளம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,
கயாமடைந்த நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.