அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை பொதுமக்கள் மீறும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது.
இதன்காரணமாக விபத்துக்கள் பல சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்திகளிலேயே விபத்துக்கள் சம்பவிக்கின்றது.
குறித்த பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் கூட , பாதசாரிகளும், சாரதிகளும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.