தமது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த 63 வயதான தந்தை தமது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று அம்பாறை – பெரியநீலாவணை – பாக்கியதுல் சாலியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பிரேத பரிசோதனை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே கொல்லப்பட்டதுடன், உயிரிழந்த இருவரும் விசேட தேவையுடையோர் என தெரியவந்துள்ளது.
பிள்ளைகளை கொலை செய்து விட்டு தமது உயிரை மாய்த்து கொள்ள முற்பட்ட 63 வயதுடைய தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.