கைத்தொழில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதியினால் இன்று நீக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்தை விமர்சித்து வருவதால், அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.