அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏன் கைது செய்யப்பட்டார்?
**************************************************************
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்பஹாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சர் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கைத்துப்பாக்கியின் தொடர் இலக்கத்தை குறிப்பிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இத் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என்ற விளக்கத்தை இன்றைய தினம் (26) குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்து வழங்குமாறு அறிவித்து கடிதம் அனுப்பபட்டிருந்தது.
ஆனால் கம்பஹாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கு தான் வைத்திருந்த துப்பாக்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரிந்திருக்கவில்லை.குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கத்தின் மூலமே அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

