அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அவர்கள் வாங்கிய கல்விக் கடனில் 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் படிக்கும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் தவித்துவருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், கல்விக் கடன் பெற்ற ஒவ்வொரு வருக்கும் 50,000 அமெரிக்க டொலர்கள் அளவுக்கு தள்ளுபடி அளிக்க வேண்டும் என ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், 10,000 டொலர்களை தள்ளுபடி செய்வதாக பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

